Put some informations about your eshop here (address, contacts etc.)

இஸ்லாம் அழைக்கிறது

இஸ்லாம் குறிப்பிட்ட மொழியினருக்கோ, பகுதியினருக்கோ, குலத்திற்கோ அல்லது நிறத்திற்கோ உரிய மார்க்கம் அன்று. அது மனித குலம் அத்தனைக்கும் சொந்தமான முழமையான ஒரு வாழ்க்கைத் திட்டம்.இஸ்லாத்தில் பிறப்பால், நிறத்தால், மொழியால், குலத்தால், எவரும் உயர்ந்தவராகவோ தாழ்ந்தவராகவோ முடியாது. இஸ்லாமிய மார்க்கத்தில் கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே இடைத்தரகர் எவருமில்லை.புரோகிதருக்கும் இஸ்லாத்தில் இடமில்லை.
இஸ்லாத்தில் ஏக இறைவனைத் தவிர வேறு எவர் முன்னிலையிலும், எதன் முன்னிலையிலும் எவரும் தன் சுயமரியாதையை இழக்கக் கூடாது. குனிவது, பணிவது, சாஷ்டாங்கமாக விழுவது உள்ளிட்ட எல்லா மரியாதைகளும் ஏக இறைவன் ஒருவனுக்கு மட்டுமே சொந்தமானவை என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை.
இஸ்லாமிய சட்டங்கள் அனைத்தும் அறிவுக்குப் பொருத்தமானவை. நடைமுறைப்படுத்த எளிமையானவை. கடந்த பதினான்கு நூற்றாண்டு களாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதற்கான அவசியமும் இல்லை.
இஸ்லாம், மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரை சந்திக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் சிறப்பாக வழிகாட்டுகிறது. மனிதன் தன்மானத்துடனும் நேர்மையுடனும் வாழச்செய்கின்றது. எனவே தூய இஸ்லாத்தின் உயர் போதனைகளை அறிந்து பின்பற்றுவீர்!
எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே!

இதை எல்லா மக்களின் இதயங்களில் பதிய வைப்போமாக

( நன்றி : அபூதாபி இஸ்லாமிய பிரச்சார மைய சிறப்பு மலர்)
03/03/2011 01:49:58
mohamed
அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை. அல்குர்ஆன் 53:3-4
Name
Email
Comment
Or visit this link or this one