Put some informations about your eshop here (address, contacts etc.)

மதீனா வரலாறு -1

மதீனா என்பதற்கு பட்டணம்,நகரம் என்பது பொருளாகும். இது ஸவூதி அரேபியாவின் மேற்கு மாநிலத்தில் (பழை ஹிஜாஸ் மாநிலத்தில் யான்பு துறைமுகத்திலிருந்து கிழக்கே 215கிலோ மீட்டர் தொலைவிலும்,மக்காவிற்கு வடக்கே 400 கிலோ மீட்டர் தொலைவிலும், ஜித்தாவிற்கு வடக்கே 400 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

துவக்கத்தில் ‘யத்ரிப்’ என்று அழைக்கப்பட்டு வந்த இந்நகரம் நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்டு குடியேறிய பின்னர் நபியின் பட்டணம் என்ற பொருளில் ‘மதீனத்துந் நபி’ (நபியின் நகரம) என்றும் ஒளிபொருந்திய நகரம் என்ற பொருளில் ‘மதீனா முனவ்வரா’ என்றும் அழைக்கப்பட்டு பின்னர் சுருக்கமாக மக்களால் ‘மதீனா’ என்று அழைக்கப்படுகிறது.

இதற்கு பல்வேறு பெயர்கள் இருப்பதாகவும், தவ்ராத்தில் மட்டும் நாற்பது பெயர்கள் இடம் பெற்pருப்பதாகவும் கூறப்படுகிறது.

குடியேற்றங்கள்

இது குறித்து ஆய்வாளர்களின் பல் வேறுவிதக் கருத்துகளைக் காணமுடிகிறது:-

1. நபி நூஹ் (அலை) அவர்களின் ஒரு மகனுடைய பெயர் ‘யத்ரிப்’ இவர் இன்றைய மதீனாவில் அன்று ஏற்பட்ட வெள்ளப் பிரளயத்திற்குப் பிறகுகுடியேறினார். அவரிலிருந்து கி.மு 3900 ஆணடுகளில் ஆரம்பமான அந்த ஊரில் பலரும் குடியேறத் துவங்கினர். (ஆதாரம் :இப்னு கதீர்)

2. நம்ரூதின் கொடுமையிலிருந்து தப்பி ஹிஜாஸில் அடைக்கலம் புகுந்து வாழ்ந்து வந்த ‘அமாலிக்’ கூட்டத்தினர் இதனை கி.மு 2200க்கும், கி.மு 1600க்கும் இடையில் நிறுவியி ருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.அவர்களுடைய தலைவனின் பெயரால் ‘யத்ரிப்’ என்று அழைக்கப்படுகிறது எனக் கூறப்படுகிறது. நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே யத்ரிப் நகரம் தோன்றிவிட்டதாக வரலாறு கூறுகிறது.

3. ஹஜ்ஜு செய்துவிட்டு நபி மூஸா (அலை) அவர்கள் தம் கூட்டத்தாருடன் திரும்பும் போது இஙகே சிலநாட்கள் தங்கினர் என்றும்,அவர்களில் சிலர் தவ்ராத்தில் முன்னறிவிப்பு செய்யப்பட்ட இறுதி நபியின் இருப்பிடம் இதுவாக இருக்குமெனக் கருதி இங்கேயே தங்கிவிட்டனர் என்றும் இதிலிருந்து இங்கே யூதர்களின் ஆதிக்கம் ஏற்படலாயிற்று என்றும் வரலாற்றாசிரியாகள் குறிப்பிடுகின்றனர்.

4. இதன் பின் கிறிஸ்துவ சகாப்தம் 4-ஆம்; நூற்றாண்டில் யமன் நாட்டின் நீர் தேக்கம் (அணைக்கட்டு) உடைந்து பெருவெள்ளம் ஏற்பட்டதன் காரணமாக அங்கு வாழ்ந்து வந்த அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரு அரபிக் கிளையினர் இங்கு வந்து குடியேறி வாழலாயினர்.

இதன் பிறகு அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வரவால் இது சிறப்புற்று விளங்கலாயிற்று.

மக்கா, மதீனா ஆகியவை உலகிலுள்ள எல்லா நகரங்களைவிடவும் சிறப்பு பெற்று விளங்குகிறது. இதையடுத்து பைத்துல் முகத்தஸ் சிறப்புற்று விளங்வதாக ஆதாரபூர்வமான நபி மொழிகள் தெரிவிக்கின்றன.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

1468 – عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « صَلاَةٌ فِى مَسْجِدِى هَذَا أَفْضَلُ
مِنْ أَلْفِ صَلاَةٍ فِيمَا سِوَاهُ إِلاَّ الْمَسْجِدَ الْحَرَامَ ».(إبن ماجة)
‘மஸ்ஜிதுல் ஹராமைத்தவிர ஏனைய பள்ளிகளில் தொழுதைவிட எனது பள்ளியில் தொழுவது ஆயிரம் மடங்கு மேலானது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), ஆதாரம்:புகாரி,முஸ்லிம், நஸாயீ,இப்னு மாஜா)
மஸ்ஜிதுல் ஹராமில் தொழுதால் ஒரு இலட்சம் நன்மைகள் கிடைக்கும்.’அறிவிப்பவர்: அனஸ்(ரலி) ஆதாரம் : இப்னு மாஜா, தப்ரானி)

ஒருவர் பயணம் மேற்கொள்வதாயின் மூன்று பள்ளிவாசல்களுக்கே தவிரபயணம் மேற் கொள்வது கூடாது. அவை மஸ்ஜிதுல் ஹராம்,மஸ்ஜிதுந்நபவீ, பைத்துல் முகத்தஸ். ஹதீஸின் சுருக்கம்.

மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவது ஒரு இலட்சம் மடங்கு மேலானது. மஸ்ஜிதுந் நபவீயில் தொழுவது ஆயிரம் மடங்கு மேலானது. பைத்துல்; முகத்தஸில் தொழுவது ஐநூறு மடங்கு மேலானது என்பது ஆதாரபூர்வமான நபிமொழிகளாகும்
03/03/2011 01:26:37
mohamed
அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை. அல்குர்ஆன் 53:3-4
Name
Email
Comment
Or visit this link or this one