Put some informations about your eshop here (address, contacts etc.)

மதீனா வரலாறு -2

அல்அஹ்ஸாப் (அகழ்) போர்:-

பத்று உஹ{து போர்களுக்குப்பின் நடைபெற்ற போரே அஹ்ஸாப் போர்.

குறைஷியர்களுடன் குரோத நெருப்பில் யூதர்களும் முஸ்லிம் களுக்கெதிராய் உழன்று கொண்டிருந்தனர். வலுவான இஸ்லாமியப் பேரரசு மதீனாவில் காலூன்றி வருவதைக் காணச் சகிக்காத யூதர்கள் குறைஷியர்களுடன் உறவு கொள்ள ஆரம்பித்தனர். விளைவு 10>000 பேர் கொண்ட குறைஷியப்படை முஸ்லிம்களுடன் போரிட மதீனா நோக்கி கிளம்பியது.

ஸலமான் (ரலி)யின் ஆலோசனை

இப்பெரும் படையை எதிர் கொள்ள நபி (ஸல்)அவர்கள் ஸல்மான் அல்பாரிஸி (ரலி) என்னும் நபித்தோழரின் ஆலோசனைப் பிரகாரம் நீண்ட அகழ்கள் தேண்டி குறைஷியப் படை முன்னேறாதவாறு செய்தனர்.அகழியின் அளவு

அகழ் 10 முழ அகலம்> 8 முழ ஆழம:> மூன்றரை மைல் (ஆறரை கிலோ மீட்டர்) நீளத்துக்கு வெட்டப்பட்டது. சுமார் 30>800 சதுர முழம் வெட்டப்பட்டது.ஆறு நாட்களுக்குள் போரிலே ஈடுபட்ட 3000 வீரர்களால் தோண்டி முடிக்கப்பட்டது. அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களும் ஒரு தளபதியாக இல்லாமல் ஒரு சாதாரண தொண்டனாக நின்று அவர்கள் பங்குக்கு அகழ் வெட்டவும்> மண்சுமக்கவும் செய்தார்கள்.எதிரிகளின் அணிகள்

மக்காவிலிருந்து அபூ ஸ{ப்யான் தலைமையில் அரபுகுலத்தார் பலருடன் 4000 பேர்களை திரட்டிக்கொண்டு மேந்கிலிருந்த மதீனர் வுக்குப் புறப்பட்டனர். இவர்களுடன் ஹ{தைல் குலத்தாரும் சேர்ந்து கொண்டனர்.

இங்கே கைபருக்கும் வாதி குராவுக்கும் விரட்டப் பட்ட யூதகுலத்த வர்களான பனூ நளீர்> பனூ கைனுகா குலத்தினர் வடக்கிலிருந்து வந்தனர். கிழக்கிலிருந்து கத்பான் தலைமையிலான படையினர் பனூ ஸலீம்> புஸாரா> முர்ரா> அஷ்ஜஃ> ஸஅத்> மற்றும் அஸத் குலத்துப் படையினர் வந்தனர்.இவர்க ஆறாயிரம் படையினராவர். மொத்தம் 10>000 பேராக அணிதிரண்டு ஒரு சின்னஞ் சிறிய நகரைத் தாக்க வந்தனர்.ஸல்மானுல் பார்ஸி (ரலி)

ஸல்மானுல் பார்ஸி பத்து நபர்களின் வேலையை தனியாளாக செய்து கொண்டிருந்தார்கள். அவர் தம் குழுவில் தான் இடம் பெற வேண்டும் என ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டி ருந்தனர். அப்போது அதை முடிவுக்குக் கொண்டுவர நபி (ஸல்) அவர்கள் வந்து ” ஸலமானு மின்னா மின் அஹலில் பைத்தி “” ஸல்மான எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் எனக் கூறினார்கள். போட்டியும் குறைந்தது.ஸல்மானின் மாண்பும் உயர்ந்தது.

பத்து பத்துப் பேர்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுக்களும் 20 முழம் வெட்டவேண்டும் என திட்டமிட்டு அவ்வாறே வெட்டி முடித்தனர். தங்கள் பங்கை முடித்தவர்கள் அடுத்த குழுவிற்குச் சென்று உதவி வந்தனர்.தாக்குப் பிடிக்காமல் எதிரிகள் மக்கா ஓட்டம்

அகழ்களைத் தாண்ட முயன்ற குறைஷியக் குதிரைப் படையினரை முஸ்லிம்வில்வித்தை வீரர்கள் தங்கள் வீரத்துக்கு விருந்தாக்கினர். ஒரு மாத காலம் கடுங்குளிரிலும் வாடைக் காற்றிலும் வதங்கிய குறைஷியப்படை இழிவடைந் தோராய் மக்கா திரும்பினர்

போர்காலத்தில் தொழும் ஜம்ஊ கஸ்ர் தொழுகை இந்நேரத்தில் தான் நபிகளாரால் (ஸல்) தொழப்பட்டது. குழப்பம் விளைவிக்கும் யூதர்களுக்குப் பாடம் புகட்டும் விதமாக பனூ குறைளா> பனீ அல்- முஸ்தலிக் முற்றுகைகள் அமைந்தன..இது பற்றிய நபி மொழிகள்:-


1182. அகழ்ப் போரின்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மண்ணைச் சுமந்து கொண்டு செல்வதை பார்த்தேன். மண் அவர்களின் வயிற்றின் வெண்மையை மறைத்(துப் படிந்)திருந்தது. அப்போது அவர்கள் இவ்வாறு (பாடிய வண்ணம்) கூறிக்கொண்டி ருந்தார்கள். (இறைவா!) நீ இல்லாவிட்டால் நாங்கள் நேர்வழி அடைந்திருக்க மாட்டோம்’ தருமம் செய்திருக்கவும் மாட்டோம்; தொழுதிருக்கவும் மாட்டோம். நாங்கள் பகைவர்களைச் சந்திக்கும் போது எங்களின் மீது அமைதியை இறக்கியருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! இவர்கள் (குறைஷிகள்) எங்களின் மீது அக்கிரமம் புரிந்துவிட்டார்கள். இவர்கள் எங்களைச் சோதனையில் ஆழ்த்த விரும்பினால் அதற்கு நாங்கள் இடம் தர மாட்டோம். புஹாரி : 2837 அல் பராஉ பின் ஆஸிப் (ரலி).


1183. நாங்கள் அகழ் தோண்டிக் கொண்டும் எங்கள் தோள்களின் மீது மண்ணைச் சுமந்து எடுத்துக் சென்று கொண்டும் இருந்த போது எங்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது அவர்கள்இ ‘இறைவா! மறுமை வாழ்க்கையத் தவிர வேறு வாழ்க்கை எதுவுமில்லை. எனவேஇ முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் மன்னிப்பருள்வாயாக!’ என்று (பாடியபடி) கூறினார்கள். புஹாரி : 3797 ஸஹ்ல் பின் ஸஅது(ரலி).


1184. ‘மறுமை வாழ்க்கையைத் தவிர வேறு (நித்தியமான) வாழ்க்கை இல்லை. அன்சாரிகளையும் முஹாஜிர்களையும் (அந்த நிரந்தர மறுமை வாழ்விற்காக) செம்மைப்படுத்துவாயாக’ என்று (பாடியபடி) நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.(புஹாரி 3795 அனஸ் இப்னு மாலிக் (ரலி)


1185. அகழ்ப் போரின்போது (மதீனா வாசிகளான) அன்சாரிகள்இ ‘நாங்கள் (எத்தகையவர்கள் எனில்) ‘நாங்கள் உயிராயிருக்கும் வரை (தொடர்ந்து) அறப்போர் புரிந்து கொண்டிருப்போம்’ என்று முஹம்மத் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்திருக்கிறோம்’ என்று பாடிய வண்ணம் (அகழ்தோண்டிக் கொண்டு) இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள்இ ‘இறைவா! மறுமை வாழ்க்கையைத் தவிர (நிரந்தரமான பெரு) வாழ்க்கை வேறெது வுமில்லை. எனவே> (அதை மகிழ்ச்சிகரமானதாக ஆக்கிக் கொள்ள உழைக்கிற மதீனாவாசிகளான) அன்சாரிகளையும் (மக்கா வாசிகளான) முஹாஜிர்களையும் கண்ணியப்படுத் துவாயாக!’ என்று (பாடலிலேயே) பதிலளித்தார்கள்.(புஹாரி : 2961 அனஸ் (ரலி.)

2) கி.பி. 626 (ஹிஜ்ரி 5) ஆம் ஆண்டு நடைபெற்ற அல் அஹ்ஸாப் (அகழ்) போரின் போது நபி (ஸல்) அவர்கள் ‘இது தான் மக்காவின் இறை நிராகரிப்பாளர்களுடன் நடைபெறும் இறுதி ப் போராகும்’ என்று முன்னறிவிப்பு செய்தார்கள். அவ்வாறே அந்தப் போருக்குப் பிறகு மக்காவாசிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் போர் நடைபெறாமல் மக்காவாசிகள் முஸ்லிம்களானார்கள். இதுவும் நபி (ஸல்) அவர் களின் முன்னறிவிப்பை மெய்பித்தது.


அடுத்து முஹம்மது நபியவர்களின் தொலை நோக்குப் பார்வை குறித்து சுருக்கமாக மட்டும் இப்போது பார்ப்போம்.


அண்ணல் நபியவர்கள் மக்காவில் அழைப்புப் பணியைத் துவக்கி ஒரு சில ஆண்டுகளே ஆகியிருக்கும். அப்போது ஒரு சிலரே இஸ்லாத்தின் அணியில் சேர்ந்திருந்தனர். மக்கத்துக் குறைஷிகள் அந்த துவக்க கால முஸ்லிம்களை சொல்லொனாத அளவுக்குக் கொடுமைக்குட்படுத்திய கால கட்டம் அது. அப்படிக் கொடுமைக் குள்ளானவர்களுள் கப்பாப் பின் அல் அரத் (ரலி)அவர்களும் ஒருவர். ஒரு தடவை அவர் நபியவர்களைக் கஃபாவின் நிழலுக்கருகே காண்கிறார்கள். எங்களுக்காக உதவி செய்திட அல்லாஹ்வைத் தாங்கள் கேட்கக் கூடாதா? என்று அவர்கள் கேட்கிறார்கள்.


நபியவர்களின் முகம் சிவந்து விடுகிறது. அப்போது அவர்கள் என்ன கூறினார்கள் தெரியுமா?


உங்களுக்கு முன்னால் வாழ்ந்த நம்பிக்கையாளர்களும் இதை விட அதிகமான கொடுமைகளுக்கு ஆளாக்கப் பட்டவர்களே! குழி ஒன்றைத் தயார் செய்து அதில் அவர்களை அமர வைத்து இரம்பத்தால் – தலைமுதல் கால் வரை – இரு கூறாகப் பிளக்கப் பட்டார்கள். இரும்பு சீப்பினால் அவர்களின் எலும்புகளிலிருந்து சதைகள் கிழித்தெரியப் பட்டன. ஆனால் இவை யாவும் அவர்களின் நம்பிக்கையைக் குலைத்து விடவில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! இந்த அழைப்புப் பணி முழுமை அடைய அதிக காலம் ஆகாது. அப்போது ஒரு பயணி யமனின் தலைநகரமான சன்ஆவிலிருந்து புறப்பட்டு ஹள்ரமவுத் வரை சென்று சேர்வார் – அவர் அல்லாஹ்வைத் தவிர வேறு எதற்கும் அஞ்சாதவராக!


அதைப் போலவே – அவர்கள் மதினாவில் ஆட்சியாளராக வாழ்ந்த கால கட்டத்திலும் – அவ்ர்களது தொலைநோக்கு சிந்தனை எப்படி இருந்தது தெரியுமா? அது அகழ்ப் போருக்கு நபியவர்களும் நபித்தோழர்களும் அகழ் ஒன்றைத் தோண்டி ஒண்டிருந்த சமயம்.


இதோ ஒரு நபித்தோழரே சொல்வதைக் கேட்போம்.


அகழ் தோண்டும் போது எந்த கடப்பாறையாலும் உடைக்க முடியாத ஒரு பாறை குறுக்கிட்டது. அதைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நாங்கள் முறையிட்டோம்.

நபியவர்கள் கடப்பாறையால் ‘பிஸ்மில்லாஹ்’ என்று கூறி ஓர் அடி அடித்து விட்டு ‘அல்லாஹ் மிகப் பெரியவன். ஷாம் தேசப் பொக்கிஷங்கள் எனக்கு வழங்கப் பட்டன. நான் இப்போது அங்குள்ள செந்நிறக் கோட்டைகளைப் பார்க்கிறேன்’ என்றார்கள்.


பின்பு இரண்டாம் முறையாக அப்பாறையை அடித்தார்கள். ‘அல்லாஹ் மிகப் பெரியவன். பாரசீகத்தின் பொக்கிஷங்கள் எனக்கு கொடுக்கப் பட்டன. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அங்குள்ள மதாயின் நகரத்தின் வெள்ளை மாளிகையை இப்போது பார்க்கிறேன்’ என்றார்கள்.


பின்பு மூன்றாம் முறையாக ‘பிஸ்மில்லாஹ்’ என்று கூறி அடித்தார்கள். மீதமுண்டான கல்லும் உடைக்கப் பட்டது. அப்போது நபியவர்கள் ‘அல்லாஹ் மிகப் பெரியவன். எனக்கு யமன் தேசத்து பொக்கிஷங்கள் கொடுக்கப் பட்டன. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எனது இந்த இடத்திலிருந்து ஸன்ஆ நகரத்தின் தலைவாயில்களைப் பார்க்கிறேன்’ என்றார்கள.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியவாறே சிரியா> பாரசீகம்> யமன் நாடுகள் வரைவிலேயே வெல்லப்பட்டன
03/03/2011 01:27:56
mohamed
அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை. அல்குர்ஆன் 53:3-4
Name
Email
Comment
Or visit this link or this one