Put some informations about your eshop here (address, contacts etc.)

இஸ்லாமியப் பார்வையில் போலித்தனம்-2 (ريا) ரியா

வணக்க வழிபாடுகளிலே போலித்தனம்!

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

يوشك زمان علي أمتي . لا يبقي من الاسلآم الا اسمه ولا يبقي من القرآن الا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدي
என் சமுதயத்தவர் மீது ஒரு காலம் வரும். அப்போது அவர்களிடம் இஸ்லாமிய வாழ்க்கைமுறை எதுவும் இருக்காது. முஸ்லிம் என்ற பெயர் மட்டுமே எஞ்சியிருக்கும்.அழகிய வடிவில் குர்ஆன் வேதநூலாக கைகிலிருக்கும். ஆனால் குர்ஆனை பின்பற்றுவோர் அதன்வழி நடப்போர் எவருமிருக்கமாட்டார்கள். பள்ளிவாசல்கள் வானளாவ உயர்ந்து நிற்கும். அவை மக்களால் நிரம்பி வழியும். ஆனால் அங்கே தக்வாவும் நேர்வழியும் இருக்காது.

இந்த நபிமொழி மக்களின் போலியான நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது.”முஸ்லிம்கள் என்போர் பெயரளவில்தான் இருப்பர்கள். அவர்களிடம் வணக்கவழிபாடுகளில் உயிரோட்டம் இருக்காது! உத்வேகம் இருக்காது ! ஈமானிய உணர்வுகள் இருக்காது.எல்லாம் போலியாகவும்,சடங்காகவும் தானிருக்கும்”. இன்றைய மக்களின் நிலையைப் பர்க்கும்போது எவ்வளவு உண்மையானது எனப் புரிகிறது.

ஓர் அறிஞர் கூறினார் : இன்றைய காலத்தில்
1. கொள்கையில்லாத அரசியல்
2. உழைப்பு இல்லாத செல்வம்
3. நாணயம் இல்லாத வியாபாரம்
4. நல்ல பண்புகளில்லாத கல்வி
5. மனிதத்தன்மைக்கு ஒவ்வாத விஞ்ஞானம்
6. மனிசாட்சிக்கு உடன்படாத இன்பம்
7. தியாகமில்லாத வழிபாடு. என்றார்.இது தான் இன்றைஉலகில் மனிதனின் நிலை.

1.தொழுகையில் போலித்தனம்!

فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ الَّذِينَ هُمْ يُرَاؤُونَ وَيَمْنَعُونَ الْمَاعُونَ
தமது தொழுகையில் அலட்சியமாகத் தோழுவோருக்குக் கேடுதான். அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகத் தொழுகின்றனர். அற்பமான தையும் கொடுக்க மறுக்கின்றனர்.(அல்மாவூன் 4,5,6 )

2.நோன்பில் போலித்தனம்!عَنْ أَبِى هُرَيْرَةَ – رضى الله عنه – قَالَ قَالَ رَسُولُ اللَّهِ – صلى الله عليه وسلم – « مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْعَمَلَ بِهِ فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِى أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ »
பொய் கூறுவதையும், போலியான செயல்களையும் யார் விடவில்லையோ அவர் உண்ணாமலும் பருகாமலும் இருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையுமில்லை. (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) ஆதாரம் : புகாரி 1903)

3.ஹஜ்ஜில் போலித்தனம்!

நபி(ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின் போது பினவருமாறு தஆ செய்தார்கள்:-

اللهم اجعله حجة لاسمعة ولا رياء فيها
பேரும் புகழும் முகஸ்துதியும் இல்லாத ஹஜ்ஜாக எனது ஹஜ்ஜை ஆக்குவாயாக.

ஒரு காலம் வரும்.அப்போது மக்கள் அல்லாஹ்வின் ஆணையை மதித்து அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜுக்கு வரமாட்டார்கள். பெயருக்காகவும் புகழுக்காகவுமே வருவார்கள். நபி பெரமானார் (ஸல்) அவர்கள் முன்னறிவிபபுச் செய்த ஒரு செய்தியின் கருத்து என் நினைவுக்கு வருகிறது.

ஒரு காலம் வரும். ஹஜ்ஜுக்காக மக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள். ஆனால் அவர்கள்,
1. பேரும் புகழுக்காக வருவார்கள்.
2. வியாபாரத்திற்காக வருவார்கள்.
3. யாசகம் கேட்பதற்காக வருவார்கள்.4. ஸகாத்தில் போலித்தனம்.

செலவந்தர்கள் ஆண்டுதோறும் கணக்குப் பார்த்து உரிய முறையில் ஸகாத் வினியோகம் செய்யமாட்டார்கள். கொடுப்பதை சில்லரையாக வினியோகம் செய்து அதையும் விளம்பரம் செய்து விடுவார்கள். புகைப்படங்கள் எடுத்து பத்திரிகைகளிலும் தொலைக்காட்சியிலும் செய்தியாகக் கொடுத்துவிடுவர்கள்.இவர்களின் போலியான ஸகாத் விளம்பர வினியோகத்திற்கு அல்லாஹ்விடம் எப்படி நற்கூலிய எத்ர்பார்க்க முடியும?முஸ்லிம்கள் நான்கு வகையினர்
உலகில் வாழும் முஸ்லிம்களை நான்கு வகையினராகப் பிரிக்கலாம்.
1. இஸ்லாத்தைப் பற்றிய எந்த அறிவும் இல்லாமலும், இஸ்லாத்தை அறவே கடைபிடிக்காமலும் இருப்பவர்கள்.
2. இஸ்லாத்தைத் தவறாகப்புரிந்து கொண்டு தவறானவைகளை இஸ்லாம் என நினைத்துக் கொண்டு அதை கடைபிடிப்பவர்கள்.
3. இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொண்டு அதை நடைமுறைப் படுத்துவதில் பெருமளவு குறைவு செய்பவர்கள். அலட்சியம் காட்டுபவர்கள்.
4. இஸ்லாத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு முடிந்தவரை எவ்விதக் குறைவுமில்லாமலும் செயலாற்றுபவர்கள்.

இந்த நான்காவது வகையினர் இறைவனை அஞ்சி, இஸ்லாத்தை சரியாகக் கடைபிக்க வேண்டுமென்ற ஆர்வமுள்ளவர்கள். அவர்களை அறியாமல் சந்திக்கின்ற ஆபத்துகள் குறித்து நாம் ஒவ்வொருவரும் எச்செரிக்கையாக இருக்கவேண்டும்.

வணக்க வழிபாடுகளோ நல்லமல்களோ தியாகங்களோ செய்யாதவர்கள் மறுமையில் நஷ்டமடைவார்கள் என்பதை நாமறிவோம்.

ஆனால், உலகில் தமது சுகங்களை தியாகம் செய்து பல்வேறு சிரமங்களையும், துன்பங்களையும் தாங்கிக் கொண்டு, உடலாலும், பொருளாலும், நிறைவேற்றப்படும் வணக்கங்கள் பயனற்றுப் போய்விடுகின்றன என்பது பலருக்குத் தெரிவதில்லை.

ஏன் எதனால் என ஆச்சரியப்படுவீர்கள் !

போலித்தனத்தால் அனைத்தும் வீணாகிவிடுகின்றன. நலலோருக்கு மிகப்பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும இந்த தீமை குறித்து சரியான அறிவும், மிகப்பெரிய எச்சரிக்கையும், அதிகமான விழிப்புணர்வும ஒவ்வொருவருக்கும் இருந்தாக வேண்டும்.

இவ்வுலகில் நாம் புரியும் எல்லாச் செயல்களுக்கும் மறுமையில் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்ற நம்பிக்கையும், நாம் இவ்வுலகி லிருந்து எடுத்துக் கொண்டு செல்லுவது நாம் செய்யும் நல்ல அமல்கள் மட்டுமே என்பதையும் நாம் ஈமான் கொண்டிருக்கிறோம்.

எனவே நம் வாழ்வில் இயன்ற வரை நற்செயல்கள் புரிவதற்கே முக்கியத்துவம் அளிக்கவேண்டும்.

நற்செயல்கள் என்பது நமது மனதில் தோன்றுபவை அல்ல. வல்லமைமிக்க அல்லாஹ்வும் அவனது இறுதித் தூதர்(ஸல்) அவர்களும் சுட்டிக்காட்டியவை மட்டுமே நற்செயல்களாகும்.
அல்லாஹ்வுக்காக என்ற எண்ணத்துடன் செய்யப்படும் நற்செயல்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளத்தக்கவையாக இருக்கும். உலக இலாபத்தை குறிக்கோளாக வைத்துச் செய்யப்படும் நற்செயலகள் அல்லாஹ் வினால் நிராகரிக்கப்படும். தூக்கிவீசப்படும். அவை தீய செயல்களாக உருமாறிவிடும்.
எனவே, இறையச்சமுடையவர்கள், தீய செயல்களாக உருமாறும் நற்செயலகள் யாவை என்பதை அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்த வகையில் ‘ரியா’ மிக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது.அதன் மறைமுகத்தன்மை அதனை மிகவும் ஆபத்தான செயலாக மாற்றுகிறது.

இதனால் அதனைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான செயலாக உள்ளது. ரியா மறைவான தனமையுடையது.எனவே,அதன் அபாயங்கள் மிகவும் கடுமையாக உள்ளன.
இருள் நிறைந்த இரவில்….

அபூ மூஸல் அஷ்அரீ (ரலி) அறிவிக்கிறார்கள்:-
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை எங்களுக்கு சொற்பொழிவாற்றினார்கள். அப்போது அவர்கள் ‘இந்த இணைவைப்பை (ரியாவை) அஞ்சிக் கொள்ளுங்கள்.ஏனெனில் ஒரு எறும்பு ஊர்ந்து செல்வதைக்காட்டிலும் புலப்படாத ஒன்றாக அது அமைந்துள்ளது.(ஆதாரம் :அத்ர்கீப் வத்தர்ஹீப்)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:-
நிலவில்லாத (இருள்நிறைந்த) ஓர் இரவின் நடுவில் கருமைநிறைந்த பாறையில் ஊர்ந்து செல்லும் (கறுப்பு) எறும்பைவிடப் புலப்படாத ஒன்றாக அது அமைந்துள்ளது.

1.ரியாவினால் ஏற்படும் ஆபத்துகள்
1. ஈமானையும் தவ்ஹீதையும் பலவீனப்படுத்துகிறது.
2. இணைவைப்பின் சிறிய வடிவம்
3. வழிகேட்டை அதிகரிக்கும்.

4. நல்லருளைப் பெற்றுத்தரும் செயல்களை பாழ்படுத்துகிறது. 5.அல்லாஹ்விடம் அவமானப்படுதல். 6. நரக நெருப்பில் நுழைவதற்கான முதன்மைக் காரணம்
7. அல்லாஹ்வுக்கு சிரம் பணிய இயலாமை
8. சுவனம் செல்வதை தடைசெயகிறது
9. சாபத்திற்குரிய செயல்கள்.
10. முஸ்லிம் சமுதாயம் அழிதல்

2.ரியா ஏற்படுவதற்கான காரணங்கள்

1. புகழைவிரும்புவது.
2. விமர்சனத்திற்கு அஞ்சுதல்.
3. மற்றமக்களிடம் உள்ள செலவங்களுக்காக பேராசைப்படுதல்

ரியாவைப்பற்றி முன்னெச்சரிக்கைகள்
1. கட்டாயந்கடமைகளை நிறைவேற்றுவதில் தாமதம் காட்டுதல்
2. இறைவணக்கத்தில் ஆர்வம் காட்டாதிருத்தல்
3. நற்செயல்களை பகிரங்கமாகச் செய்தல்

3.நற்செயலகளை பாழ்படுத்தும் தீயகுணங்கள்

1. நேரத்தின் அடிப்படையில் எழும் ரியா

1. ஒரு செயலைச் செயவதற்கு முன் ஏற்படும் ரியா
2. ஒரு செயலை செயது கொண்டிருக்கும் போது ஏற்படும் ரியா.
3. நற்செயலை செய்து முடித்தபின் எழும் ரியா

2.செயலகளின் அடிப்படையில் எழும் ரியா

1. முழு உடலும் ரியாவில் ஈடுபடுவது
2. மேடைப்பேச்சு
3. தோற்றம்
4. சகாக்களும் தோழர்களும்
5. குடும்பம்

4.ரியாவாகக் கருதப்படாத செயல்கள்
1. உள்நோக்கம் இல்லாத பாராட்டுக்கள்
2. நல்ல தோற்றம்
3. மற்றவர்களுக்கு நல்ல ஆலொசனை கூறுதல்
4. தனது பாவங்களை மறைத்துக் கொள்ளுதல்
5. பயபக்கதியுடையோருடன் அமரும்போது நற்செயல்களை அதிகப்படுத்துதல்
6. மார்க்க வழிபாடும் உலக நன்மைகளும்.

5.ரியாவைத்தவிர்ப்பது எப்படி?
1. அறிவை அதிகரித்துக் கொள்ளுதல்
2. பிரார்த்தனை
3. சுயபரிசோதனை
4. பக்தியுடையோருடன் சேர்ந்திருத்தல்
5. ரியா பற்றிய விழிப்புணர்வு

ரியா கலப்பில்லாத இறைநம்பிக்கைக்கு வழி என்ன?
1. ரியாவாகிவிடுமோ என்ற அச்சத்தில் நற்செயல்களைத் தவிர்த்துக் கொள்ளுதல்
2. சாதனைகளை பகட்டிற்காக வெளிப்படுத்துதல்

சிறிய வகை இணைவைப்பின் ஏனைய வடிவங்கள்
1. சகுனம் பார்த்தல்
2. அல்லாஹ் அல்லாத மற்றவர்களின்; பெயரில் சத்தியம் செய்தல்
3. இயற்கை நிகழ்வுகளுக்கு மனிதர்களை- காலத்தை காரணமாக்குதல்

ரியாவிலிருந்து காப்பாற்ற
இறைவனிடம் கையேந்துவோம்.

வல்ல இறைவன் திருமறையில் கூறுகிறான்:

وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللّهِ إِنَّهُ سَمِيعٌ عَلِيمٌ
(நபியே!)ஷைத்தானிடமிருந்து ஒரு சிறிய ஊசலாட்டம் ஏற்படுமாயின் அல்லாஹ்வைக் கொண்டு பாதுகாப்புத்தேடிக் கொள்வீராக!நிச்சயம் அவன் செவியுறுபவன்.யாவற்றையும் அறிகிறவன்.( 7:200,41:36)

ஒருமுறை நாயகத் தோழர்கள் ரியாவிலிருந்து பாதுகாப்புப் பெற நாங்கள் என்ன சேய்யவேண்டும் என வேண்டிய போது நபி (ஸல்) அவர்கள் பின் வரும் துஆவை ஓதுமாறு கூறினார்கள்

اللهم اني أعوذ بك من أن أشرك بك شيئا وأنا أعلم واستغفرك لما لا أعم إنك أنت علآم الغيوب
நான் அறிந்த நிலையில் உனக்கு ஏதொன்றையும் இணைவைப்பதை விட்டும உன்னிடம் பாதுகாப்புத்தேடுகிறேன்.நான அறியாமல் செய்த பாவங்களுக்காக உன்னிடம் பிழை பொறுக்கத் தேடுகிறேன்.

இறைவன் ரியாவினால் ஏற்படும் தீங்குகளைவிட்டும், ஷைத்தானின் சூழ்ச்சிகளைவிட்டும் நம்மை பாதுகாத்தருள்வானாக!
03/03/2011 01:17:04
mohamed
அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை. அல்குர்ஆன் 53:3-4
Name
Email
Comment
Or visit this link or this one